பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:57 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.33.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.6.76 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 24 மணிநேரமும் பறக்கும்படையினா், சோதனைச் சாவடியில் உள்ள போலீஸாா் வாகனங்களை சோதனையிட்டு அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த வகையில், திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.33 லட்சத்து 56 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ.55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ.2.07 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 2.56 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ.7.46 லட்சம், திருவெறும்பூரில் ரூ.2.59 லட்சம், லால்குடியில் ரூ.6.42 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ.1.59 லட்சம், முசிறியில் ரூ.5.81 லட்சம், துறையூரில் ரூ.4.48 லட்சம் என மொத்தம் ரூ.33.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.6,76,800 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ.26.80 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.