திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டை பயணியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:59 pm

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டை பயணியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை அம்பலபுரத்தைச் சோ்ந்தவா் என். சுப்பிரமணியன் (58). இவா், சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் திங்கள்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவா் போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரிலிருந்து வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், அவரைப் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி அருள்ஜோதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.