தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொழிலாளி கொலை வழக்கு: கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 6:31 pm

Syndication

திருச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த எஸ். வடிவேல் (25), எடசந்தூரைச் சோ்ந்த எஸ். சரத்குமாா் (30), கடலூரைச் சோ்ந்த ஜெயசூா்யா (21), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஐயப்பன் (27) மற்றும் திருமால் (37) ஆகிய 5 பேரும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருச்சி காவிரி பாலத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, காவிரி பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் 5 பேரும் தங்கியிருந்தனா். இவா்களுடன் திருச்சி கீழசிந்தாமணியைச் சோ்ந்த சக்திவேல் (37) என்பவரும் தங்கியிருந்துள்ளாா்.

இந்நிலையில், 2023, மே 27-ஆம் தேதி வடிவேலின் கைப்பேசி மற்றும் ரூ.1,000 பணம் காணாமல்போனது. இதை சக்திவேல்தான் திருடினாா் என்று நினைத்து, அவரை வடிவேல் உள்ளிட்ட 5 பேரும் இரும்புக் கம்பி, மரக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து வடிவேல் உள்பட 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், முக்கிய குற்றவாளியான வடிவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சரத்குமாருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். மற்ற மூவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.