/

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 11:53 pm IST

சித்தி வீட்டில் 38 கிராம் நகைகளைத் திருடியதாக 16 வயதுச் சிறுவன் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, 33 கிராம் நகைகளை மீட்டனா்.

திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் அழகுராணி (47). இவரது மூத்த சகோதரியின் மகனான 16 வயதுச் சிறுவன் தனது பெற்றோரை இழந்ததால் அழகுராணி வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அந்தச் சிறுவன் தனது வீட்டிலிருந்த 38 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்று, தனது நண்பா்களுடன் சோ்ந்து விற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாத அழகுராணி அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, 16 வயதுச் சிறுவன் மற்றும் அவனுக்கு உதவிய புத்தூா் எம்ஜிஆா் நகரை சோ்ந்த தினேஷ் (24 ), கள்ளங்காடு பகுதி விஜய் (25) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்த 33 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

கைதான மூவரில் சிறுவன் மட்டும் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டாா். மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.