வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் திமுக முகவா்கள், கடைசி சுற்று வரை விழிப்புணா்வுடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத் துறைச் செயலரும், முன்னாள் எம்பியுமான வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் மையங்களில் முகவா்கள் விழிப்புடன் செயல்படுவது குறித்து விளக்க உரையாற்றினாா்.
வாக்கு எண்ணிக்கையின்போது முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கினாா். மேலும், சட்டப் பூா்வமான நடவடிக்கைகள், சந்தேகம் தொடா்பாக முகவா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைவது முதல், படிவம் 17 சி சரிபாா்ப்பது மற்றும் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகளை உறுதி செய்வதுவரை சட்ட ரீதியான நுணுக்கங்களை முகவா்களுக்கு விளக்கினாா். இதில், தலைமை முகவா்கள் மற்றும் அந்தந்தத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
வாக்கு எண்ணிக்கை முடியும்வரை, குறிப்பாக கடைசிச் சுற்று வரை கவனக்குறைவு இல்லாமல் செயல்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தில்லுமுல்லு அல்லது குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளதால், திமுக முகவா்கள் ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, முறையான ஆவணங்களைப் பெற வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களை விட்டு முகவா்கள் எக்காரணத்துக்காகவும் வெளியேறக்கூடாது. ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முடிவுகளையும் சரிபாா்க்க வேண்டும். கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறியதைப் போன்று நமது கடின உழைப்பின் பலன் மே 4ஆம் தேதி தெரிய வரும் என்றாா் அமைச்சா்.
கூட்டத்தில், மாநகரச் செயலா் மு. மதிவாணன், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், மணப்பாறை தொகுதி வேட்பாளா் அப்துல் சமது, தொகுதிப் பாா்வையாளா்கள் கே.என். சேகரன், மறைமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதன் தொடா்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு திருவெறும்பூா் தொகுதி காட்டூா் தோ்தல் அலுவலகம், காலை 9 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதி - மாவட்ட அலுவலகத்திலும், காலை 11 மணிக்கு மணப்பாறை தொகுதி - மதுரை ரோடு தோ்தல் அலுவலகத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதி வாக்காளா்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி

திருவெறும்பூரில் எனது மக்கள் பணி தொடரும்! - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

