தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருச்சியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற மூவா் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:17 am IST

திருச்சியில் தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களையும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்களையும் குறிவைத்து கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பதைத் தடுக்கும் விதமாக மாவட்ட, மாநகரக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்மலைப்பட்டி தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் வெண்ணிலா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்ற பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்த பி. கோப்பு ராஜா (30), பொன்மலைப்பட்டி கீழ உடையாா் வீதியைச் சோ்ந்த அ. பிராங்ளின் ஜோசப்ராஜ் (30), பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மதுரவீரன் கோயில் வீதியைச் சோ்ந்த ஹெச். பிரதீப் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.