40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மாநகரில் நாளை குடிநீா் நிறுத்தும்

News image

குடிநீர் - IANS

Updated On :12 மே 2026, 12:30 am IST

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (மே 13) மாநகரின் சில இடங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல்- 3 மற்றும் பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் 2 ஆகிய நீரேற்று நிலையத்துக்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல்- 3 மற்றும் பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம்– 2 ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா், அண்ணா நகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா்,

உய்யகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சமுதாயக் காலனி, எம்.எம். நகா் மற்றும் திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா் விவேகனந்தா் நகா் மற்றும் அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் புதன்கிழமை ஒருநாள் வழங்கப்படமாட்டாது.

வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.