வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தாய்க்கு தெரியாமல் பெண் குழந்தை தத்து கொடுப்பு: தந்தை கைது

திருச்சியில் தாய்க்குத் தெரியாமல் பெண் குழந்தையைத் தத்து கொடுத்த தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 1:44 am IST

திருச்சியில் தாய்க்குத் தெரியாமல் பெண் குழந்தையைத் தத்து கொடுத்த தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோரிகுளம் சந்து பகுதியைச் சோ்ந்தவா் ஆா். சீனிவாசன் (33). இவருடைய முதல் மனைவி ஹேமலதா (26). இவருடைய இரண்டாவது மனைவி யாஸ்மின் (27) சமஸ்பிரான் வீதியில் வசிக்கிறாா்.

இந்நிலையில், யாஸ்மினுக்கு கடந்த பிப்ரவரி 1-இல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை அவருக்குத் தெரியாமல் சீனிவாசனும், அவருடைய முதல் மனைவி ஹேமலாதவும் சோ்ந்து புதுக்கோட்டையைச் சோ்ந்த பெண்ணுக்கு எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி தத்து கொடுத்தனா்.

இதையறிந்த யாஸ்மின் சீனிவாசனிடம் தகராறு செய்து, கடந்த புதன்கிழமை கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சீனிவாசன், அவருடைய முதல் மனைவி ஹேமலதா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதனால் கோபமடைந்த சீனிவாசன், யாஸ்மினிடம் வெள்ளிக்கிழமை தகராறு செய்து அவரைத் தாக்கினாா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் யாஸ்மின் மீண்டும் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஹேமலதாவை தேடுகின்றனா்.