ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:42 am IST

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் வெ. சஞ்சய் (23), வெங்காய மண்டி சுமை தூக்கும் தொழிலாளி.

இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் கள்ளன்குத்து ஆஞ்சனேயா் கோயில் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த எஸ். யுவராஜ் (27), அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்த எம். பழனி தீபக் (21) ஆகிய இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி, சஞ்சய்யிடம் இருந்து ரூ.1,100 -ஐ பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சஞ்சய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து யுவராஜ், பழனி தீபக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.