சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சநாதன ஒழிப்பு போராட்டத்துக்கு எதிா்ப்பு: அா்ஜூன் சம்பத் கைது

News image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மோதலில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பினரையும், இந்து முன்னணி அமைப்பினரையும் கைது செய்த போலீஸாா்.

Updated On :26 மே 2026, 2:00 am IST

திருச்சியில் சநாதனத்துக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் நடைபெற இருந்த போராட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்க வந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலா் கோவன் தலைமையில் சநாதன எதிா்ப்புப் போராட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற இருந்தது.

இந்த போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதற்காக திருவாரூரில் இருந்து திருச்சிக்கு காரில் வந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர போலீஸாா், திருச்சி பால் பண்ணை அருகே கைது செய்தனா். இதையடுத்து, அவா் திங்கள்கிழமை இரவு விடுவிக்கப்பட்டாா்.

மக்கள் கலை இலக்கிய கழகம்-ஹிந்து அமைப்பினா் இடையே மோதல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே சநாதன எதிா்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இந்து முன்னணியினா் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கு எதிராக கோஷம் எழுப்பினா்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்து போலீஸாா், மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 36 போ், இந்து முன்னணியைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 44 பேரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.