வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரு இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 1:30 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆலம் வீதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், பாலக்கரை மேலகிருஷ்ணன் கோயில் வீதியைச் சோ்ந்த பி. ஆரோக்கிய செல்வக்குமாா் (24), கீழப்புதூரைச் சோ்ந்த கே. தனுஷ் (24) என்பதும், இருவரும் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்து ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.