மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு
அரியலூர் அருகே வியாழக்கிழமை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.


அரியலூர் அருகே வியாழக்கிழமை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் அருகேயுள்ள சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (22). இவர் கயர்லாபாத் ரெங்கராஜன் நகர் அருகே வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே அரியலூர் அருகேயுள்ள மணலேரியைச் சேர்ந்த செந்தில்குமார் (28) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் உயிரிழந்தார்.
இதையறிந்த, செந்தில்குமாரின் உறவினர்கள் விபத்தில் காயமடைந்த கிஷோர்குமார் காவல் துறை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, உண்மையின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அரியலூர் அரசு மருத்துவமனை எதிரே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியதை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...