அரியலூர் மாவட்டத்தில் கண் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் (கண் பார்வையற்றவர்கள் எழுதப் படிக்க தேவையில்லை, பதிவு செய்து ஓராண்டு முடித்தவர்கள்) முதல் பட்டதாரிகள் வரை பயன்பெறலாம்.
பொது வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன் பெறுபவர்களும், பெற்றவர்களும் (பத்தாண்டில் எஞ்சிய காலத்துக்கு) உதவித்தொகை பெறலாம்.
பள்ளி இறுதி வகுப்புத் தேர்வும், அதற்கு கீழ் உள்ள கல்வித் தகுதிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 300, மேல்நிலை (பிளஸ் 2) கல்வித் தகுதி தேர்வுக்கு ரூ. 375, பட்டதாரிகளுக்கு ரூ. 450 வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும்.
அதாவது, 31.3.2013 அன்று அல்லது அதற்கு முன்னதாகப் பதிவு செய்தவராக இருக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.3.2013 -ம் தேதி 45 வயதைக் கடந்தவராகவும், மற்ற வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராகவும், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியாக இருக்கக் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயில்பவராக இருக்கலாம்.
சுய தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருக்கக் கூடாது. இந்த தகுதியுடைய நபர்கள் பூர்த்தி செய்த படிவங்களை மே 31 -ம் தேதிக்குள் அலுவலக வேலைநாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம் பெற பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு

4-ஆம் காலாண்டு: நஷ்டத்தில் ஸ்விகி, அா்பன் கம்பெனி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
