முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஜயங்கொண்டம் அனல் மின்திட்டத்தை தொடங்க வலியுறுத்தல்

ஜயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :13 மே 2013, 1:37 am IST

ஜயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியலூரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத்  தலைவர் நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநிலச்  செயலர் சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தை உடனடியாக தொடங்கி, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாகுறையை நீக்க வேண்டும். அனந்தபுரி, கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரியலூரில் நின்று செல்ல வேண்டும். திருச்சியில் இருந்து லால்குடி வரை செல்லும் பயணிகள் ரயிலை, அரியலூர் வரை நீடிக்க வேண்டும். ரயில் நிலையத்தில் நடைபயிற்சி பூங்கா வசதி ஏற்படுத்த வேண்டும்.

திருமானூர் ஒன்றியம், புள்ளம்பாடி வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். கீழப்பழூர் ஸ்ரீ ஆலந்துறையார் கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதிகளை அரசு கையகப்படுத்த வேண்டும். கோவில் தேரை சீரமைத்து மீண்டும் தேரோட்டம் நடத்த வேண்டும்.

கனரக வாகனங்களால் கீழப்பழூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கீழப்பழூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும். ஜயங்கொண்டம் முதல் பொன்பரப்பி, பெரியாகுறிச்சி வழியாக திட்டக்குடி எல்லை வரை பேருந்து இயக்க வேண்டும். பொன்பரப்பியை மையமாகக் கொண்டு முந்திரி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இலையூர், கோலயம்பட்டி, மருதூர், துளார் ஆகிய பகுகளில் உள்ள பல்லுயிர் தொன்ம படிவங்கள், கற்கள், ஆயுதங்களை பாதுகாக்க தொல்லியல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம், காய்கறி மார்க்கெட், சன்னதி தெரு ஆகிய இடங்களில் இலவச கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நூல் நிலையத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும். செந்துறை வட்டம், கழுமங்கலம் கிராமத்தை உடையார்பாளையம் வட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன.

இதில் திருச்சி கோட்ட நிர்வாகிகள் கண்ணன், பெரியசாமி, தாழ்த்தப்பட்டோர் அணி மாநில பொதுச் செயலர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அபிராமி, மாவட்டச் செயலர்கள் அய்யப்பன், பழனிசாமி, செல்வராசு, சுமதி சேகர், மாவட்டப் பொருளாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள்  பாண்டியன், இளவரசன், பாலசுப்பிரமணியன், கமலா கலைச்செல்வன், இளைஞரணி தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.