ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்த இரண்டு பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :13 மே 2013, 1:34 am IST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்த இரண்டு பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவலில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு அருகில் ஏடிஎம் மைய இயந்திரம் உள்ளது.

இங்கு சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு பேர் மது அருந்திவிட்டு பணம் எடுக்க வந்தனர்.

அப்போது, இயந்திரத்தில் பணம் வராததால், ஏடிஎம் மைய  இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளர் ஜேக்கப் சகாரியார் (57) ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் ஆகியோர் வழக்குப் பதிந்து, இதுதொடர்பாக கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), செங்குந்தபுரத்தைச்  சேர்ந்த பாலமுருகன் (35)

ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.