உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

பட்டா வழங்கக் கோரி பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு பட்டா வழங்கக் கோரி, அரியலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில், அரியலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு பட்டா வழங்கக் கோரி, அரியலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில், அரியலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து மகளிர் நலச் சங்கம் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் பி. வளர்மதி தலைமை வகித்தார்.

இதில், அரியலூர் சார் ஆட்சியர் மூலம் கணக்கெடுக்கப்பட்ட ஏழைகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் தொழில்கடன் வழங்க வேண்டும், அரியலூர் நகராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் புதைச்சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றி சாலைவசதி ஏற்படுத்தி தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். அரியலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும், நகராட்சியில் துப்புரவுப் பணிக்கு கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஐனநாயக மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழரசி, ராணி, ஜெயந்தி, கவிதா, பூங்கொடி, நீலா, அமுதா உள்ளிட்ட திரளான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.