தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

"தமிழக உரிமைகளை நிலைநாட்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்'

தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகள் பொதுநலத்துடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்றார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

Published On :9 ஜனவரி 2024, 12:19 pm IST

தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகள் பொதுநலத்துடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்றார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

அரியலூர் மாவட்டம், செந்துறையில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் பெரியார் விருது பெற்ற திமுக முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது: 

திராவிட கொள்கைகளால்தான் தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி, பெண் கல்வி, பெண்களுக்கு சொத்தில் பங்கு உள்ளிட்ட பல்வேறு சமுதாய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், தற்போது திராவிட கொள்கைககு எதிராக பல சக்திகள் ஒன்று திரண்டு உள்ளன. தமிழகத்தின் நலனுக்காக தமிழக கட்சிகள் பொது நலத்துடனும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினரும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஞானமூர்த்தி (செந்துறை),ஜோதிவேல்(அரியலூர்), க.சொ. கண்ணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 500 நபர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.