
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 7,518 மாணவ, மாணவிகள் எழுதினர்.
அரியலூர் மற்றும் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 7,628 மாணவ, மாணவிகளில் 7,518 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 110 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதில் மாற்றுத்திறனாளிகள் 13 பேர் தேர்வு எழுதினர். அவர்களுக்கு அரை மணி நேரம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 476 அறை கண்காணிப்பாளரும்,26 முதன்மை கண்காணிப்பாளரும்,26 துறை அலுவலர்களும்,76 பறக்கும் படையினரும் பணியில் ஈடுபட்டனர்.
தேர்வுக்கு முன்னதாக மாவட்ட கல்வித்துறை மூலம் மாணவர்கள் தேர்வறைக்குள் பெல்ட், காலனி மற்றும் ஷீ அணிவது, கால்குலேட்டர், செல்லிடப்பேசி போன்றவைகளை கொண்டு செல்ல தடை விதித்தனர்.
அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.
பெரம்பலூரில் 8742 பேர் எழுதினர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 4,385 மாணவர்களும், 4,357 மாணவிகளும் என மொத்தம் 8,742 நபர்கள் தேர்வு எழுதினர். இதில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10 பேரும், மாணவிகள் 12 பேரும் தேர்வு எழுதினர்.
தேர்வு மையத்துக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராக 32 தலைமை ஆசிரியர்களும், 24 தேர்வு மையத்திற்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 33 ஆசிரியர்களும், தேர்வு மையத்திற்கு 8 வழித்தடங்களில் வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்ல 8 வழித்தட அலுவலர்களும், தேர்வுக்கு அறைக் கண்காணிப்பாளராக 521 ஆசிரியர்களும், தேர்வுகள் சிறந்த முறையில் நடைபெற 62 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் என மொத்தம் 68 பேர் தனிதேர்வர்களாக தேர்வு எழுதினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





