மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அசாவீரன்குடிக்காட்டில் திருவள்ளுவர் ஞான மன்றம் தொடக்கம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அசாவீரன்குடிக்காட்டு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் திருவள்ளுவர் ஞான மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:03 am

DIN

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அசாவீரன்குடிக்காட்டு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் திருவள்ளுவர் ஞான மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது
தொடக்க விழாவுக்கு சமூக ஆர்வலர் சோழன்குடிக்காடு கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் வீரமணி, செல்வராசு, ராஜமோகன், சமூக ஆர்வலர் அயன்தத்தனூர் நீலமேகம், பூமுடையான் குடிக்காடு முத்து, பரமசிவம், கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளுவர் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,நிர்வாகி கொளஞ்சிநாதன் ஆகியோர் பங்கேற்று,மன்ற பெயர் பலகையை  திறந்து வைத்து,திருக்குறளின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். சோழன்குடிக்காடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்க.சிவமூர்த்தி திருவள்ளுவரைப் பற்றி பேசினார். விழாவில், திருவள்ளுவரின் புகழை அனைத்து மக்களிடமும் எடுத்துரைப்பது  என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.முடிவில் ஆசிரியர் அழகு செல்வராசு நன்றி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.