சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலிப் பணியிடங்கள்:தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி. சுமதி தெரிவித்துள்ளார்.


அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி. சுமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடத்தில் 2 இடங்களும் ( எம்.பி.சி -1, பி.சி- 1), இளநிலை நிர்வாக உதவியாளர் கணினி ஆபரேட்டர் (பொது -10, அலுவலக உதவியாளர் ( எம்.பி.சி-1) ஆகிய பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பம்,கல்வித்தகுதி,விண்ணப்பிக்கும் முறை,இன ஒதுக்கீடு,வயது வரம்பு, இதர தகுதிகள்,விதிமுறைகள், ஊதிய விவரங்கள் அனைத்தும் http://ecourts.gov.in/tn/ariyalur என்ற இணையதளத்தில் உள்ளது.
இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவர், அரியலூர் என்ற முகவரிக்கு இம்மாதம் 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...