சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் கிராமப்புறச் சாலைகளில் இருபுறமும் வளர்ந்துள்ள முள்செடிகள், சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் கிராமப்புறச் சாலைகளில் இருபுறமும் வளர்ந்துள்ள முள்செடிகள், சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருமானூர் வட்டம், கோவிலூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கிளைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : கோவிலூரில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் ஏழைகளுக்கு வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை உயர் அலுவலர்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக் கூட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலர் மருதமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் ஆறுமுகம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...