விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு

திருமழப்பாடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியாவிடம் அண்மையில் மனு அளித்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:26 am

DIN

திருமழப்பாடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியாவிடம் அண்மையில் மனு அளித்தனர்.
 இதுதொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் மகாலிங்கம், நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:  அரியலூர் மாவட்டம், திருமழப்பாடி கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தற்சமயம் நீர்வரத்து இல்லை.
 இங்கு கடந்த 10 ஆண்டுகளாக மணல் குவாரி அமைத்து, தொடர்ந்து மணல் அள்ளப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி அமைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் முன்வந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.