கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச காப்பீடு : நவ.27-க்குள் விண்ணப்பிக்கலாம்
கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச காப்பீட்டுத் திட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச காப்பீட்டுத் திட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைத்தறி நெசவாளர்களுக்கான மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்போது, மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017-2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2,00,000 ஆயுள் காப்பீட்டு தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2,00,000,பகுதி ஊனம் அடைந்தால் ரூ.1,00,000-ம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது.50 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60,000 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை, எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், வரும் 27-ஆம் தேதிக்குள் தங்களது புகைப்படம், வங்கி கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைத்த விவரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, எண்.6, பக்தபுரி தெரு, கும்பகோணம் என்ற முகவரியில் நேரில் அனுகி பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...