பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
புதிய கடன்களை விரைந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் ஜி. ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியத் துணைச் செயலர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் பரிசுத்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.