பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், திருமானூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:01 am

DIN

அரியலூர் மாவட்டம், திருமானூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவப் பரிசோதனை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் முறையாக கிராம செவிலியர்கள் கிராமத்திற்கு வருகை புரிந்து மருந்து மாத்திரைகள் வழங்குகின்றனரா,  தடுப்பூசிகள் போடப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும்,  சித்தா பிரிவில் நடைபெற்று வரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியையும் பார்வையிட்டு, நிலவேம்பு கசாயப்பவுடர் இருப்பு உள்ளதா என்றும் கேட்டறிந்தார். 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறதா என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவர்கள்,  செவிலியர்கள், பணியாளர்கள் விவரங்களை கேட்டறிந்து, அவர்களுடைய வருகைப்பதிவேட்டினை ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவப் பரிசோதனைக் குறித்தும், டெங்கு சம்மந்தப்பட்ட நோயாளிகள் வரப்பெற்றுள்ளனரா, மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து,  திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், சுள்ளங்குடி பஞ்சாயத்து அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தும், காமரசவல்லி சுக்கிரன் ஏரிக்கு வரும் நீர் வரத்தையும், கரையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.