பெரம்பலூர் மாவட்டம் பாலம்பாடி கிராம மக்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது பாலம்பட்டி கிராமம். அரியலூரை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருவதால், இந்தக் கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைச் சரிசெய்து, சீரான குடிநீர் விநியோகிக்குமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பாலம்பட்டி கிராம மக்கள், ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்த பேருந்தை சிறைப்பிடித்து அரியலூர் -ஆலத்தூர் கேட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அரியலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு, மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

