மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தில், வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தில், காய்கறியில்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:40 am

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலணிக்குழி கிராமத்தில், வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தில், காய்கறியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் அசோகர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.  பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கீதபிரியா, வேளாண் உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் தேவதாஸ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியில் மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி வரவேற்றார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.