அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் - காவல்துறை நல்லுணர்வு கலந்துறையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்குமார் உத்தரவின்பேரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) மேகலா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் பொதுமக்களிடையே பேசியது:
பொதுமக்களாகிய நீங்களும், காவல்துறையும் எப்போதும் நல்லுணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், உங்களது சட்டரீதியான குறைகளை எங்களிடம் எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம்.மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து பெற்றோர்அவசியம் சொல்லித் தர வேண்டும். மேலும், குழந்தைகள் சொல்லும் கருத்துகளை பெற்றோர் தடுக்கக் கூடாது. அதுபோல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அவசியம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.அப்போது வெளியூர்களில் படிக்கும் சாத்தமங்கலத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் தினமும் அரசு பேருந்துகளில் சென்று வருகிறோம். ஆனால் எங்களது ஊரில் அரசு பேருந்துகள் நிற்பதில்லை என்றனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தெரிவித்தார். முன்னதாக கீழப்பழுவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பையா வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

