அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கலைச்செல்வி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றியாற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கல்லக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை வளர்மதி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பள்ளகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை மங்கையர்கரசி தேசியக் கொடியை ஏற்றிவைத்து,பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். க. அம்பாபூர் அரசு மேல்நிலப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)

முந்திரியில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலை! செந்துறை விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

பெரம்பலூா் மாவட்டத்தில் தூா்ந்து வரும் ஏரிகள்! சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


