‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தி மறியல்

செந்துறை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்தக் கோரி மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் வங்கியை பூட்டிச் சென்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

செந்துறை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்தக் கோரி மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் வங்கியை பூட்டிச் சென்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த நமங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்கள் தேர்தலுக்கு ஆக.25இல் வேட்புமனு தாக்கலும், ஆக.27ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்பு மனுக்கள் பெறும் நாளில் தேர்தல் அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர், ஆட்சியரிடம் அதுதொடர்பாக மனு அளித்தனர்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் 11 பேர் போட்டியின்றி இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டதாக புதன்கிழமை காலை வங்கி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய இணைச் செயலாளர் சுந்தரம், வட்டார காங்கிரஸ் தலைவர் செந்தில், திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் கருப்புசாமி, விவசாயிகள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதன்பின், முறையாக தேர்தல் நடத்த வலியுறுத்தி வங்கி ஊழியர்களை வெளியேற்றி வங்கியை இழுத்து பூட்டி கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.