சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

மாமனாரைத் தாக்கியமருமகன் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மாமனாரைத் தாக்கிய மருமகன் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மாமனாரைத் தாக்கிய மருமகன் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 
உடையார்பாளையம், அய்யாசாமி பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(51). இவர், தனது மகள் மோகனப்பிரியாவை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜாவுக்கு(28) கடந்தாண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், ராஜா வெளிநாடு செல்ல மாமனார் கலியபெருமாளிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பணமில்லை என மறுத்ததாகத் தெரிகிறது.  இதையடுத்து, ஏற்பட்ட தகராறில் கலியபெருமாளை ராஜா தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கலியபெருமாள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.