தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறப்பு மருத்துவ முகாம்களில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே சாத்தம்பாடி,செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி ஆகிய பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:09 am

DIN

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே சாத்தம்பாடி,செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி ஆகிய பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா ஆய்வு செய்தார்.
மேற்கண்ட முகாம்களுக்குச் சென்ற ஆட்சியர் அங்கு தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மற்றும் இ.சி.ஜி பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறப்பு கண் சிகிச்சை பிரிவு, காது மூக்கு, தொண்டை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, குழந்தை மருத்துவம்,எச்.ஐ.வி பரிசோதனை உள்ளிட்டவை முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், முகாமில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு  இரும்புச் சத்து மாத்திரைகள், உணவு வகைகளை மருத்துவர்கள் பரிந்துரைத்திட அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, 
தா. பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.