இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாநில கையுந்துப் பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம் தொடக்கம்

சிவகங்கையில் நடைபெறும் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு முகாம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:10 am

DIN

சிவகங்கையில் நடைபெறும் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு முகாம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சிவகங்கையில் வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கையுந்துப் பந்து போட்டி நடக்கிறது. இதில் அரியலூர் மாவட்ட வீரர்கள் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு முகாம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 27 ஆண்களும்,25 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 12 ஆம் தேதி வரை, தனித்திறமை,ஆக்க சூழ்நிலை உள்ளிட்ட தேர்வு நடத்தப்பட்டு,அதில் திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.இந்த தேர்வு  முகாமை பெரம்பலூர் மாவட்ட கையுந்து பந்து கழக செயலர் சண்முகசுந்தரம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சம்சுதீன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.