பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் முன் இயற்கை மேம்பாடு இயக்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் முன் இயற்கை மேம்பாடு இயக்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் தலைவர் பாளை.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் வரதராசன், வழக்குரைஞர் மேனக்க்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கருப்பையா, சமூக ஆர்வலர்கள் பாஸ்கர், கலியபெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அவர்கள் பேசுகையில், தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுக் கடைகளுக்கு முக்கியத்துவம் தரும் தமிழக அரசு மக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. எனவே, தமிழக அரசு மக்களின் நலனைக் கருதி பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையேல் வரும் தேர்தலில் ஆளும் கட்சி பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும், மேலும், கடந்த 2016 டிசம்பர் மாதத்தில் பிரிமியம் செலுத்திய விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு வழங்க வேண்டும், இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com