தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கங்கைகொண்டசோழபுரம்  கோயிலில் தேரோட்டம்

மாசிமக பிரமோத்சவ விழாவை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 2:48 am

DIN

மாசிமக பிரமோத்சவ விழாவை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கொடிமரம் கடந்தாண்டு ஜனவரியில் அமைக்கப்பட்டது. 85 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2017 பிப்.2-ல் குடமுழுக்கும் நடைபெற்றது. 
இக்கோயிலின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி  கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று, ஸ்ரீகாஞ்சி அன்னாபிஷேக கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றம், யாகசாலை பூஜைகள், மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்வாக 26-ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம்,   தொடர்ந்து 9-ம் நாளான புதன்கிழமை தேரோட்டமும் நடைபெற்றது.  வியாழக்கிழமை மாசிமக தீர்த்தவாரி நடத்தப்பட உள்ளது. ஏற்பாடுகளை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.