புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:32 am

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வரலாற்றுத் துறைத் தலைவர் மேஜர் ஜி. இருளப்பன் தலைமை வகித்து பேசினார். பேராசிரியர்கள் பெ. செல்லத்துரை, ரா. தெய்வப்பிரகாசம், ஆனந்த குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ரத்தின ராஜமாணிக்கம் பங்கேற்று, மாணவர்கள் படிப்புடன், தங்களது தனித்திறமைகளையும் வளர்த்துக் கொண்டால் அவை வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார் அவர். 
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழக கிளைத் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, இளங்கலை மாணவர் அருள் வரவேற்றார். முடிவில் முதுகலை மாணவர் சி.விஜய் நன்றி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.