மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அரியலூரில்  எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய

Updated On :29 மார்ச் 2018, 1:34 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். வார வேலைநாள்கள் 5 என அறிவித்திட வேண்டும். புதிய பணி நியமனத்தை உடனடியாக நடத்திட வேண்டும். 
பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கண்ட சங்கத்தினர், ஒரு மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் வீரசேகரபாண்டியன் தலைமை வகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.