மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மணல் குவாரிக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரிக்கை

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :14 மே 2018, 10:46 pm

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் வடிவேல்முருகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் அரியலூர் சுந்தரமூர்த்தி, தா.பழூர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் பொருளாளர் ரெங்கசாமி, கடலூர் மாவட்டச் செயலர் பாலமுருகன் மற்றும் அரியலூர் மாவட்ட செயலர் முத்தையன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர். முன்னதாக திருமானூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.