அரியலூர் மாவட்டத்தில் பலாப்பழம் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.
சீசன் தொடங்கியுள்ளதால் அரியலூரில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ.200 முதல் ரூ300 வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் சில்லறையாகவும், மொத்தமாகவும் பலாப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் பலர் பலாப் பழங்களை அதிக ஆர்வத்தில் வாங்கி செல்வதால் விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து பண்ருட்டியைச் சேர்ந்த வியாபாரிகள் கூறியது: மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப் பழ சீசன். இந்த சீசன் காலங்களில் நாங்கள் விளைவித்த பலாப் பழங்களை பல்வேறு ஊர்களுக்கு லாரிகள் மூலம் சென்று விற்பனை செய்து வருகிறோம்.
கடலூருக்கு பக்கத்து மாவட்டமான அரியலூரில் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது சீசன் காலம் என்பதால் 2 முதல் 3 மாதங்கள் வரை இங்கு வந்து விற்பனை செய்வோம். நடப்பாண்டில் பலாப்பழம் விற்பனை சிறப்பாக உள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

