முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்தவர் கைது

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்து, தலைமறைவாக இருந்த  இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

Updated On :23 ஜனவரி 2019, 7:20 am IST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்து, தலைமறைவாக இருந்த  இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி முல்லையம்மாள்(65).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டியங்கொல்லையில் உள்ள தனது பேரன் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து,முல்லையம்மாளின் காதை அறுத்து தங்க கம்மல், சங்கிலி,மூக்குத்தி ஆகியவற்றை பறித்துச் சென்றார்.
இது குறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், நகையைப்பறித்துச் சென்றவர் விழுப்புரம் மாவட்டம்,கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ராக்கெட் ராஜா(எ)முத்துக்குமார் என்பது தெரியவந்தது.  
இதையடுத்து போலீஸார் அவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.