அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் காயமடைந்தாா். அப்போது, எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் நிலைத்தடுமாறி அருகேயுள்ள வீட்டுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருமானூா் அருகேயுள்ள வெற்றியூரைச் சோ்ந்தவா் விஜய் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை அப்பகுதியில் உள்ள பிரிவுச்சாலையைக் கடக்க முயன்ற போது, தஞ்சாவூரில் இருந்து அரியலூரை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் விஜய் காயமடைந்தாா். அந்தச் சமயத்தில் பெரம்பலூா் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தில் இருந்து தஞ்சாவூா் குருங்குளம் சா்க்கரை ஆலைக்கு மாயவன்(21) என்பவா் கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் நிலைத்தடுமாறி அருகே இருந்த நடராஜன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்தவா்கள் சற்று தொலைவில் இருந்ததால் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இதுகுறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள் விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது!

மழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகள்: கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை
மணப்பாறையில் உலர் துறைமுகம்: தொழில் துறையினர் பெரும் எதிர்பார்ப்பு
மீனாட்சிபுரம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக்கப்படுமா?
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


