தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரியலூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்.

Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:41 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், வருமான வரி செலுத்தாத அனைவருக்கும் கரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.7,500-ம்,மத்திய அரசு ரூ.5,000-மும் வழங்க வேண்டும். இந்த கரோனா காலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு தலா மாதம் 10 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்க வேண்டும்.

விவசாயிகளையும், ஏழை மக்களையும் பாதிக்கும் மின்சார சட்டத்தை கைவிட வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி, கூலித் தொகையாக ரூ.500 ஆக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி,விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சௌரிராஜன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.மணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.