கல்லூரி திறப்பு: மழையிலும் ஆா்வமுடன்வந்த மாணவ, மாணவிகள்
பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மழையிலும் குடை பிடித்தவாறு ஆா்வமுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனா்.


பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மழையிலும் குடை பிடித்தவாறு ஆா்வமுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குச் சென்றனா்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாத இறுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
பொது முடக்கத் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா் அரசு, தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. மேலும் அவா்களுக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன.
கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்ததால் அதற்கேற்ப மாணவ, மாணவிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனா். அவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தபின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தனிமனித இடைவெளியில் மாணவ மாணவியா் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டிருந்தனா்.
சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முன்னதாக கல்லூரிகளின் வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...