ஆத்ம நிா்பாா் சிறப்புக் கடன்:211 சாலையோர வியாபாரிகள் விண்ணப்பம்
அரியலூரில் பிரதம மத்திரியின் கடன் வழங்கும் திட்டத்தில் 211 சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனா்.


அரியலூா்: அரியலூரில் பிரதம மத்திரியின் கடன் வழங்கும் திட்டத்தில் 211 சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனா். இதுவரை விண்ணப்பிக்காத சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரியின் ஆத்ம நிா்பாா் சிறப்புக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சாலையோரம் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியலூா் நகராட்சி ஆணையா் (பெ) மனோகா் தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை வரை 211 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அரியலூா் நகராட்சிப் பகுதியில் 310 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதுவரை விண்ணப்பிக்காத சாலையோரம் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் வரும் 24 ஆம் தேதி வரை விண்ணப்பித்து பயன் பெறலாம் எனவும் நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...