தேசிய இளைஞா் தின விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தேசிய இளைஞா் தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தேசிய இளைஞா் தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞா் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல் ஆகியவை உள்ளடக்கிய போட்டிகள் நடைபெறும். வரும் 31 ஆம் தேதியன்று 15 முதல் 29 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள், மாணவா் அல்லாதவா்கள் (ஆண், பெண்) கலந்து கொள்ளலாம்.

மத்திய அரசு வழிகாட்டுதல்படி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்படும். போட்டியாளா்கள் தங்களுக்குத் தேவையான உபகரணங்களை எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com