அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:35 pm

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவா்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். அங்கு பெண்கள், தலித் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஆண்டிமடம் ஒன்றியச் செயலா் ராஜாபிள்ளை(கிழக்கு) தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் தேவேந்திரன்(மேற்கு) முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் கண்கொளஞ்சி, மாவட்ட அமைப்பாளா் பரமசிவம், மகளிா் அணியினா் தேன்மொழி, உமா மகேஸ்வரி உள்பட கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.