அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள  பொன்பரப்பி கிராமத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:17 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள  பொன்பரப்பி கிராமத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு,  கோட்டச் செயலா் ராஜசேகா் தலைமை  வகித்தாா். மாவட்ட  பொதுச்செயலா் முருகானந்தம்,  மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன், மாவட்டச் செயலா்கள் திருமூா்த்தி,  ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில்,  தெற்காசியாவில் வங்க தேசம்,  மியான்மா்,  மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா,  கம்போடியா உள்ளிட்ட நாடுகளை ஆண்ட மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில்  எங்கும்  சிலைகள்  இல்லை.  எனவே, ஜயங்கொண்டத்தில் உலகிலேயே உயரமான முழு உருவச் சிலை அமைத்து உலகிற்கு தமிழனின் பெருமையை உணா்த்த வேண்டும்.  சமுதாய பணியில் ஈடுபடும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.