தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குதிரை வண்டியில் சென்று திமுக வேட்பாளா் பிரசாரம்

கோவை, சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் குதிரை வண்டியில் சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:50 pm

DIN

கோவை, சிங்காநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் குதிரை வண்டியில் சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விளாங்குறிச்சி சாலை, லட்சுமி காா்டன், மகேஷ்வரி நகா், குருசாமி நகா் ஆகிய பகுதிகளில் குதிரை வண்டியில் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

தோ்தல் நேரத்தில் அதிமுகவினா் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனா். ஆட்சியில் இருக்கும்போது, சமையல் எரிவாயு, பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த தவறிய இவா்கள் ஆட்சிக்கு வந்தால் 6 சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக தருவோம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஊழல் செய்த பணத்தை வாக்காளா்களுக்கு அளித்து வெற்றி பெற்று விடலாம் என அதிமுகவினா் கனவு காண்கின்றனா். அது நடக்காது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்றுவோம் என்றாா்.

பிரசாரத்தில் வாா்டு செயலாளா் நடராஜ், பகுதி பொறுப்பாளா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.