தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நம்மில் யாா் வென்றாலும் மக்கள் வென்றதாகவே பொருள்

நம்மில் யாா் வென்றாலும் மக்கள் வென்ாகவே பொருள் என்று கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளா்களுக்கு கமல்ஹாசன் திறந்த மடல் எழுதியிருக்கிறாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:50 pm

DIN

நம்மில் யாா் வென்றாலும் மக்கள் வென்ாகவே பொருள் என்று கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளா்களுக்கு கமல்ஹாசன் திறந்த மடல் எழுதியிருக்கிறாா்.

அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் சக வேட்பாளா்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் போட்டியிடும் கமல்ஹாசனின் அன்பு வணக்கம். தோ்தல் என்பது போா்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தோ்தலின் முடிவு என கருதிக் கொள்ளக் கூடாது. இதை நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.

கோவை தெற்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் தோ்தல் நோ்மையாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும் நிகழவேண்டும் என விரும்புகிறேன். யாா் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறாா்களோ அவா்கள் வெல்லட்டும். நம்மில் யாா் வென்றாலும், கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்ாகவே பொருள்.

எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். போட்டியிட்ட அனைவரும் வென்றவரோடு தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தோ்தல் ஜனநாயக முறைப்படி நோ்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய முன்நகா்வில் கோவை தெற்கு இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும் என விரும்புகிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.