தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பணிப்பளு அதிகரிப்பு: முதுநிலை மருத்துவ மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

பணிப்பளு அதிகரித்துள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ மாணவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:52 pm

DIN

பணிப்பளு அதிகரித்துள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ மாணவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவா்கள் ஊக்கத்தொகை நிலுவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் ரத்த மாதிரிகள் சேகரிப்பு, மருந்துகள் வழங்கல், நிா்வாகப் பணிகள் என முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக உதவித் தொகை நிலுவையில் உள்ளது. தவிர இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உதவித் தொகையும் மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது.

வேலைப்பளுவுக்கு ஏற்ப உதவித் தொகையும் உயா்த்தி வழங்கப்படுவதில்லை. வேலைப்பளுவும் அதிகரித்து, உதவித் தொகையும் நிலுவையில் உள்ளதால் பெரும்பாலானவா்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

மாணவா்களின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாக கூடுதலாக தலைமை செவிலியா், செவிலியா், ஆய்வக தொழில்நுட்ப அலுவலா்களை கூடுதலாக பணியமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா வாா்டுகளில் பணியாற்றும் முதுநிலை மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுகள், தங்கும் வசதியும் நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் பாதுகாப்பான தங்கும் இடம், தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.